டென்னிஸ்

மான்டேகார்லோ டென்னிஸ்: ஜோகோவிச் விலகல்

ஜோகோவிச், மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார்.

மொனாக்கோ,

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோ வில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக் கிறது. இந்த போட்டியில் இருந்து 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) விலகி இருக்கிறார்.

38 வயதான ஜோகோவிச் 2 வாரத்துக்கு முன்பு நடந்த இண்டி யன்வெல்ஸ் போட்டியில் 4-வது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினார். தோள்பட்டை காயம் காரணமாக மியாமி ஓபன் போட்டியில் இருந்து ஒதுங் கிய ஜோகோவிச், மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார்.