டுரின்,
ஆண்டின் இறுதியில் நடைபெறும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 4 வீரர்கள் முதல் முறையாகப் பங்கேற்க உள்ளனர்.
ஆண்டின் இறுதியில் நடைபெறும் புகழ்பெற்ற நிட்டோ ஏ.டி.பி. (Nitto ATP Finals) டென்னிஸ் தொடர் இத்தாலியின் டுரின் நகரில் உள்ள இனால்பி அரங்கில் நவம்பர் 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 8 வீரர்களும், இரட்டையர் பிரிவில் 8 ஜோடிகளும் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆண்டுக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடத் தகுதி பெற்ற 8 வீரர்களின் விவரம்:
1. அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி)
2. கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்)
3. பென் ஷெல்டன் (அமெரிக்கா)
4. டேனில் மெத்வதேவ் (ரஷியா)
5. பிளாவியோ கோபொல்லி (இத்தாலி)
6. ஆர்தர் பில்ஸ் (பிரான்ஸ்)
7. பிரான்சிஸ் தியாபோ (அமெரிக்கா)
8. ரபேல் ஜோடார் (ஸ்பெயின்)
இந்த 8 வீரர்களில் இத்தாலியின் பிளாவியோ கோபொல்லி, பிரான்சின் ஆர்தர் பில்ஸ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபோ, ஸ்பெயினின் ரபேல் ஜோடார் ஆகிய 4 பேரும் முதல் முறையாக இந்தத் தொடரில் விளையாட உள்ளனர்.
இதற்கிடையே, இந்தத் தொடரின் இரட்டையர் பிரிவில் தகுதி பெற்ற 8 ஜோடிகளிலும் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.