லண்டன்,
முன்னாள் வீரர் ரோஜர் பெடரரின் இமாலய சாதனையை நோவக் ஜோகோவிச் தகர்த்தார்.
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்றில் 7 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் - ரோமன் சபியுலின் மோதினர்.
விருவிருப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6 (8-6), 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ரோமன் சபியு லினை வீழ்த்தி 17-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். விம்பிள்டனில் அவர் ருசித்த 106-வது வெற்றி இதுவாகும்.
இதன் மூலம் விம்பிள்டன் டென்னிஸில் அதிக வெற்றிகளை பெற்றவரான சுவிட்சர்லாந்து முன்னாள் வீரர் ரோஜர் பெடரரின் (105 வெற்றி) சாதனையை தகர்த்தார்.