image courtesy: ROLEX PARIS MASTERS twitter  
டென்னிஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார்

நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்வெரேவ், ஹம்பெர்ட் உடன் மோதினார்.

பாரீஸ்,

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீரர் ஹம்பெர்ட் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஸ்வெரேவ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஹம்பெர்ட்டை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.