டென்னிஸ்

கத்தார் ஓபன் டென்னிஸ்; ஹாலெப்பை வீழ்த்தி பிரான்சின் கார்சியா முன்னேற்றம்

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியனான சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு கார்சியா முன்னேறியுள்ளார்.

தோஹா,

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் நடந்த முதல் சுற்று மகளிர் ஒற்றையர் போட்டியில், உலக தரவரிசையில் 76வது இடத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டின் கரோலின் கார்சியா, டாப் 5 வீராங்கனைகளில் ஒருவர் மற்றும் முன்னாள் தோஹா சாம்பியனான சிமோனா ஹாலெப் ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தி கார்சியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.