image courtesy: AFP 
டென்னிஸ்

கத்தார் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஒலிம்பிக் சாம்பியன் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

ஜோகோவிச் முதல் சுற்று ஆட்டத்தில் மேட்டியோ பெரெட்டினி உடன் மோதினார்.

தோகா,

முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவரும், ஒலிம்பிக் சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலி வீரரான மேட்டியோ பெரெட்டினி உடன் மோதினார்.

இதில் ஜோகோவிச் 6-7 (4-7), 2-6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT