ஆந்த்ரே ரூப்லெவ் (image courtesy: AFP)  
டென்னிஸ்

கத்தார் ஓபன் டென்னிஸ்: ரஷிய வீரர் ரூப்லெவ் சாம்பியன்

நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ், இங்கிலாந்தின் ஜாக் டிராபெருடன் மோதினார்.

தோகா,

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), தரவரிசையில் 16-வது இடம் வகிக்கும் ஜாக் டிராபெருடன் (இங்கிலாந்து) மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆந்த்ரே ரூப்லெவ், 7-5, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் ஜாக் டிராபெரை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

SCROLL FOR NEXT