டென்னிஸ்

இந்தியன் வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடர் - கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் ரஃபேல் நடால்

இந்தியன் வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு, முன்னணி வீரர் ரஃபேல் நடால் முன்னேறி உள்ளார்.

கலிபோர்னியா,

இந்தியன் வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடர் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-ம் சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் வீரர் நடாலும், அமெரிக்க வீரர் ரெய்லி ஒபெல்காவும் மல்லுக்கட்டினர். போட்டியில் நடாலுக்கு ஒபெல்கா, கடும் சவால் அளித்த நிலையில், முதல் செட்டை டை-பிரேக்கரில் 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் நடால் தனதாக்கினார்.

ஒபெல்காவின் சிறப்பான ஆட்டத்தால் 2-வது செட்டும் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியாக 2-வது செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி, நடால் போராடி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதி சுற்றுக்குள் கால்பதித்த நடால், நாளை நடைபெறும் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸுடன் மோத உள்ளார்.