டென்னிஸ்

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் - சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்தியன் வெல்ஸ் இறுதிப்போட்டிக்கு அவர் முன்னேறியுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் செக் குடியரசை சேர்ந்த லிண்டா நோஸ்கோவாவை 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்தியன் வெல்ஸ் இறுதிப்போட்டிக்கு அவர் முன்னேறியுள்ளார்.

இறுதிப்போட்டியில் கசகஸ்தானை சேர்ந்த மூன்றாம் நிலை வீராங்கனை எலேனா ரிபாகினாவை சபலென்கா சந்திக்கிறார். ரிபாகினா தனது அரையிறுதி ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை 7-5, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்துள்ளார்.