டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் - நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த அலெக்சாண்ட்ரா

இதன் மூலம் அலெக்சாண்ட்ரா 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

லண்டன்,

பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக், அலெக்சாண்ட்ரா ஈலாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

அதிர்ச்சி தோல்வி

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் - அலெக்சாண்ட்ரா ஈலா மோதினர். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-7 (9-11), 2-6 என்ற நேர்செட்டில் அலெக் சாண்ட்ரா ஈலாவிடம் (பிலிப்பைன்ஸ்) அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

முதல் பிலிப்பைன்ஸ் நாட்டவர்

இந்த வெற்றியின் மூலம் ஈலா கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய முதல் பிலிப்பைன்ஸ் நாட்டவர் என்ற பெருமையை பெற்றார்.

அதைபோல் நடந்த மற்ற ஆட்டங்களில், ஜாஸ்மின் பாவ்லினி, எலிசி மெர்டென்ஸ், மார்த்தா கோஸ்ட்யுக் , மரிய போஸ்கோவா, நோஸ்கோவா ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.