ஷாங்காய்,
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான டேனில் மெட்விடேவ் (ரஷியா) 6-4, 7-5 என்ற நேர் செட் டில் சிட்சிபாசை (கிரீஸ்) வீழ்த்தி 4-வது முறையாக காலிறுதியை எட்டினார். அடுத்து அவர் அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதுகிறார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் ஜோடர் தன்னை எதிர்த்த வான் டி ஜான்ட்சோல்ப்பை (நெதர்லாந்து) 6-7 (4-7), 6-4, 6-2 என்ற செட் கணக் கில் வெளியேற்றினார். நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டுக்கு எதிரான ஆட்டத்தில் கனடாவின் ஆகர் அலியாசிம் 2-5 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது கால்முட்டி காயத்தால் விலகினார். இதனால் கேஸ்பர் ரூட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் காலிறுதியில் ஜோடரை சந்திக்கிறார்.