டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரைஇறுதிக்கு முன்னேறினார் மெத்வதேவ்

ஸ்பெயின் வீரர் ரபெல் ஜோடர், கேஸ்பர் ரூட்டை (நார்வே) எதிர்கொண்டார்.

ஷாங்காய்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் ஜோடர். 24-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட்டை (நார்வே) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான ஆட்டத்தில் 20 வயதான ரபெல் ஜோடர் சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வெளி யேற்றி முதல்முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு கால்இறுதியில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் 6-3. 1-6, 6-3 என்ற செட் கணக்கில் டாமி பாலை (அமெரிக்கா) விரட்டினார். அரைஇறுதியில் மெட்விடேவ், ரபெல் ஜோடரை சந்திக்கிறார்.

SCROLL FOR NEXT