புதுடெல்லி,
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது .இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
இன்று நடந்த 2-வது சுற்றில் கிரீசின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் லூசியானோ டார்டெரி உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் அர்ஜெண்டினாவின் ஜுலான் மேனுவலை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.