ஷாங்காய்,
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவை வீழ்த்தி ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போகினா ஷாங்காய் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ள ஸ்வரேவும், டேவிடோவிச் போகினாவும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் செட்டில் சிறப்பாக விளையாடிய ஸ்வரேவ், 7-5 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார்.
இதற்குப் பதிலடி கொடுத்த டேவிடோவிச் போகினா, அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி 6-4 என்ற கணக்கில் வென்றார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.
வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்த டேவிடோவிச் போகினா, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதன் மூலம் 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வரேவை வீழ்த்திய டேவிடோவிச் போகினா, ஷாங்காய் மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.