டென்னிஸ்

6-வது முறையாக டபிள்யூ.டி.ஏ. ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றி சினியாகோவா அசத்தல்

இரட்டையர் பிரிவில் சிறந்து விளங்கும் அவர், தற்போது ஒற்றையர் பிரிவிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

ஒசாகா,

ஜப்பான் மகளிர் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை செக் குடியரசு வீராங்கனை கத்ரீனா சினியாகோவா வென்றார்.

ஆதிக்கம்

ஜப்பான் மகளிர் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செக் குடியரசு வீராங்கனை கத்ரீனா சினியாகோவா, அமெரிக்காவின் ஆஷ்லின் க்ரூகரை எதிர்கொண்டார்.

முதல் செட்டில் 2-1 என முன்னிலை பெற்ற சினியாகோவா, அதன் பிறகு தொடர்ந்து 10 கேம்களை வென்று ஆதிக்கம் செலுத்தினார். இதனால் க்ரூகரால் அவருக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இறுதியில் 6-1, 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சினியாகோவா, ஜப்பான் மகளிர் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார்.

6-வது பட்டம்

இந்த வெற்றியின் மூலம் சினியாகோவா தனது தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையில் 6-வது டபிள்யூ.டி.ஏ. ஒற்றையர் பிரிவு பட்டத்தைக் கைப்பற்றினார். இரட்டையர் பிரிவில் சிறந்து விளங்கும் அவர், தற்போது ஒற்றையர் பிரிவிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

SCROLL FOR NEXT