டென்னிஸ்

விம்பிள்டனில் ஜானிக் சின்னர் அசத்தல்... தொடர்ந்து 5-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறி சாதனை

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் ஜானிக் சின்னர், ஷிந்தாரோ மொச்சிசூகியை எதிர்கொண்டார்.

லண்டன்,

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஜானிக் சின்னர்,ஷிந்தாரோ மொச்சிசூகியை வீழ்த்தி, தொடர்ந்து ஐந்தாவது முறையாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ்

லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரும் நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜப்பானின் ஷிந்தாரோ மொச்சிசூகியை எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னர், 6-3, 7-6 (7-0), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஜோகோவிச்சுக்கு அடுத்தபடியாக

இந்த வெற்றியின் மூலம், விம்பிள்டன் தொடரில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள சின்னர், ஓபன் எரா வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்திய 11-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மேலும், தற்போது விளையாடி வரும் வீரர்களில், 7 முறை விம்பிள்டன் சாம்பியனான நோவக் ஜோகோவிச்சுக்கு அடுத்தபடியாக தொடர்ந்து ஐந்து முறை காலிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் ஜானிக் சின்னர் பதிவு செய்துள்ளார்.