image courtesy: ATP Tour via ANI 
டென்னிஸ்

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்..!

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வந்தது.

மான்ட்கார்லோ,

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 5-வது இடம் வகிப்பவருமான சிட்சிபாஸ் (கிரீஸ்), 46-ம் நிலை வீரர் டேவிடோவிச் போகினாவை (ஸ்பெயின்) சந்தித்தார்.

1 மணி 36 நிமிடங்கள் நீடித்த இந்தமோதலில் சிட்சிபாஸ் 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட்டில் போகினாவை தோற்கடித்து மீண்டும் மகுடம் சூடினார்.

'ஓபன் எரா' வரலாற்றில் (1968-ம் ஆண்டுக்கு பிறகு) இந்த பட்டத்தை அடுத்தடுத்து வெல்லும் 6-வது வீரர் சிட்சிபாஸ் ஆவார். அவருக்கு ஏறக்குறைய ரூ.7 கோடி பரிசுத்தொகையுடன், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது.

தோல்வி அடைந்த போகினா தரவரிசையில் 27-வது இடத்துக்கு முன்னேறுகிறார். அவர் 2-வது சுற்றில் 'நம்பர் ஒன்' வீரர் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT