ஸ்டாக்ஹோம்,
ஸ்வீடனில் நடைபெற்று வரும் ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடரில், அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ், இத்தாலியின் லோரென்சோ முசெட்டி உள்ளிட்டோர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரூனே போட்டியிலிருந்து விலகினார். இதனால், டெய்லர் பிரிட்ஸ் விளையாடாமலேயே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி, பிரான்சின் யூகோ ஹம்பர்ட்டை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முசெட்டி 7-6 (7-5), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் சிலியின் அலெஜாண்ட்ரோ தபிலோ, அமெரிக்காவின் அலெக்ஸ் மைக்கேல்சனை 7-5, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
அதேபோல், அர்ஜென்டினாவின் தியாகோ அகஸ்டின் திரான்டே, கஜகஸ்தானின் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோவை 7-6 (7-5), 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இதன்படி, அரையிறுதியில் டெய்லர் பிரிட்ஸ் - லோரென்சோ முசெட்டி, அலெஜாண்ட்ரோ தபிலோ - தியாகோ அகஸ்டின் திரான்டே ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.