டென்னிஸ்

நிங்போ ஓபன் இரட்டையர் பிரிவு: திரில் வெற்றி பெற்று சாம்பியனான ஸ்டொல்லார் - க்ராவ்சிக் ஜோடி

ஸ்டொல்லார் - க்ராவ்சிக் ஜோடி 7-6 (7-5) என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது.

நிங்போ,

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில், ஹங்கேரியின் ஸ்டொல்லார் மற்றும் அமெரிக்காவின் க்ராவ்சிக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

முதல் செட்

2026-ம் ஆண்டுக்கான நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், ஹங்கேரியின் ஸ்டொல்லார் மற்றும் அமெரிக்காவின் க்ராவ்சிக் ஜோடி ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சா மற்றும் அமெரிக்காவின் நிக்கோல் மெலிச்சார்-மார்ட்டினெஸ் ஜோடியை எதிர்கொண்டது.

இதில், முதல் செட்டில் இரு ஜோடிகளும் கடுமையாகப் போராடின. இதனால், செட்டின் வெற்றியாளரைத் தீர்மானிக்க டைபிரேக்கர் நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக விளையாடிய ஸ்டொல்லார் - க்ராவ்சிக் ஜோடி 7-6 (7-5) என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது.

இரண்டாவது செட்டில் பதிலடி

இரண்டாவது செட்டில் கம்பேக் கொடுத்த புக்சா - மெலிச்சார் ஜோடி சிறப்பாக விளையாடி 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனால், போட்டி வெற்றியாளரை தீர்மானிக்கும் மேட்ச் டைபிரேக்கருக்கு சென்றது.

மேட்ச் டைபிரேக்கரில் வெற்றி

வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டைபிரேக்கரில் ஸ்டொல்லார் - க்ராவ்சிக் ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 10-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று நிங்போ ஓபன் இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

SCROLL FOR NEXT