டென்னிஸ்

ஸ்டட்கர்ட் சர்வதேச டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் அசத்தல் வெற்றி

ஸ்டட்கர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் குணேஸ்வரன் அசத்தல் வெற்றி பெற்றார்.

ஸ்டட்கர்ட்,

ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் மெர்சிடஸ் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 169-வது இடம் வகிப்பவரும், தகுதி நிலை வீரருமான இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 23-ம் நிலை வீரர் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) எதிர்கொண்டார். 1 மணி 48 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் சென்னையைச் சேர்ந்த குணேஸ்வரன் 7-6 (8-6), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் ஷபோவலோவுக்கு அதிர்ச்சி அளித்தார். ஏ.டி.பி. தொடரில் முதல் முறையாக ஆடும் குணேஸ்வரனின் டென்னிஸ் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் மிஸ்ச்சா ஸ்வெரேவை விரட்டினார்.

SCROLL FOR NEXT