Image Courtesy: @PorscheTennis  
டென்னிஸ்

ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்: ரைபகினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

ஸ்டட்கார்ட்,

முன்னணி வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ரைபகினா (கஜகஸ்தான்), இகா ஸ்வியாடெக் (போலந்து) உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய ரைபகினா 2வது செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதையடுத்து பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டில் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி ரைபகினா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT