image courtesy:PTI 
டென்னிஸ்

டேபிள் டென்னிசில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழக வீரர் சரத் கமல்

டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இருந்து தமிழக வீரர் சரத் கமல் ஓய்வு அறிவித்துள்ளார்.

சென்னை,

உலக டேபிள் டென்னிசில் 'ஸ்டார் கன்டென்டர்' தொடர் சென்னையில் வருகிற 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருடன் இந்தியாவின் முன்னணி வீரருமான சென்னையை சேர்ந்த சரத் கமல் (வயது 42) ஓய்வு பெற உள்ளதாக நேற்று அறிவித்துள்ளார்.

கேல்ரத்னா, அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ள சரத் கமல் காமன்வெல்த் விளையாட்டில் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப்பதக்கமும், ஆசிய விளையாட்டில் 2 வெண்கலப்பதக்கமும், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 4 வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார். தேசிய சாம்பியன்ஷிப்பில் 10 முறை மகுடம் சூடியிருக்கிறார்.