துரின்,
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப் படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நக ரில் நடந்து வருகிறது. வீரர்கள் ஜான் மெக்கன்ரோ, இவான் லென்டில் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றனர்.
ஜான் மெக்கன்ரோ பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரர் பென் ஷெல்டன், ரபெல் ஜோடரை (ஸ்பெயின்) எதிர்கொண்டார். பென் ஷெல்டன் 7-6 (10-8). 7-5 என்ற நேர்செட்டில் ரபெல் ஜோடரை வீழ்த்தி 2-வது வெற்றியை தன்வசப்படுத் தினார். ஏற்கனவே ஒரு தோல்வி கண்டு இருந்தார். தொடர்ந்து 3-வது தோல் வியை சந்தித்த ரபெல் ஜோடர் அரைஇறுதி வாய்ப்பை இழந்தார். அரைஇறு திக்கு தகுதி பெற்று விட்ட அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்துல் பில்சுடன் (பிரான்ஸ்) மோதுகிறார். இதில் ஆர்துல் பில்ஸ் நேர்செட்டில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்த தவறி னாலே பென் ஷெல்டன் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விடுவார்.
முந்தைய நாளில் இவான் லென்டில் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் அமெ ரிக்க வீரர் பிரான்சிஸ் டியாபோ 7-6 (8-6), 6-0 என்ற நேர்செட்டில் பிளாவியோ கோபோலியை (இத்தாலி) தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தார்.