புதுடெல்லி,
புதுடெல்லியில் நடைபெற்று வரும் 31-வது பெனெஸ்டா ஓபன் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில், பெண்கள் 16 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான தீப்தி வெங்கடேசன் தோல்வியடைந்தார்.
டி.எல்.டி.ஏ. டென்னிஸ் வளாகத்தில் நடைபெற்ற 2-வது சுற்றுப் போட்டியில், தீப்தி வெங்கடேசன் கர்நாடகாவை சேர்ந்த உன்னதி முரளிதரனை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய உன்னதி முரளிதரன், 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தீப்தியை வீழ்த்தினார். வெறும் 1 மணி 11 நிமிடங்களில் ஆட்டத்தை முடித்த அவர், வெற்றியுடன் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தத் தொடரில் முதல் நிலை வீராங்கனையாக களமிறங்கிய தீப்தி வெங்கடேசன் 2-வது சுற்றிலேயே தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.