டென்னிஸ்

டென்னிஸ் உலகில் புதிய ராணி... ஆண்டின் நம்பர்-1 இடத்தை உறுதி செய்த ரைபகினா

2016-ம் ஆண்டு தனது 17-வது வயதில் உலகத் தரவரிசையில் 616-வது இடத்தில் இருந்தார் ரைபகினா.

டோக்கியோ,

கஜகஸ்தான் டென்னிஸ் வீராங்கனை எலினா ரைபகினா, தனது டென்னிஸ் வாழ்க்கையில் முதல்முறையாக ஆண்டின் இறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனையாக திகழும் பெருமையைப் பெற்றுள்ளார். டோரே பான் பசிபிக் ஓபன் தொடரின் 2-வது சுற்றில் சகநாட்டு வீராங்கனை யூலியா புடின்ட்சேவாவை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை அவர் உறுதி செய்தார்.

புடின்ட்சேவா

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் டோரே பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்றில் எலினா ரைபகினா, யூலியா புடின்ட்சேவாவை எதிர்கொண்டார். இதில் ரைபகினா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆண்டின் நம்பர்-1

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் தனது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ரைபகினா, அப்போது முதன்முறையாக உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்.

தற்போது இந்தவெற்றியின் மூலம், 2026-ம் ஆண்டை உலகின் முதல் நிலை வீராங்கனையாக நிறைவு செய்வதையும் உறுதி செய்துள்ளார். இதன்மூலம் ஆண்டின் இறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனை என்ற பெருமையைப் பெறும் முதல் கஜகஸ்தான் வீராங்கனை என்ற வரலாற்றையும் உருவாக்கியுள்ளார்.

ரைபகினாவின் தரவரிசைப் பயணம்

2016-ம் ஆண்டு தனது 17-வது வயதில் உலகத் தரவரிசையில் 616-வது இடத்தில் இருந்த ரைபகினா, படிப்படியாக முன்னேறி தற்போது முதலிடத்தை எட்டியுள்ளார்.

2016-ல் 616-வது இடத்தில் ஆண்டை நிறைவு செய்தார்.

2018-ல் 191-வது இடத்தைப் பிடித்தார்.

2019-ல் 37-வது இடத்துக்கு முன்னேறி முதல் 100 இடங்களுக்குள் நுழைந்தார்.

2020-ல் 19-வது இடத்தையும், 2021-ல் 14-வது இடத்தையும், 2022-ல் 22-வது இடத்தையும் பிடித்தார்.

2023-ல் 4-வது இடத்திலும், 2024-ல் 6-வது இடத்திலும், 2025-ல் 5-வது இடத்திலும் ஆண்டை நிறைவு செய்தார்.

தற்போது 2026-ம் ஆண்டை முதலிடத்தில் நிறைவு செய்வதை உறுதி செய்துள்ளார்.

SCROLL FOR NEXT