உக்ரைன்,
உலக பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் முன்னணி வீராங்கனையாக விளங்குபவர் எலினா ஸ்விடோலினா.இவர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர். இவர் தற்போது ரஷிய மற்றும் பெலாரஷிய டென்னிஸ் வீரர்களுக்கு எதிராக டென்னிஸ் போட்டிகளில் விளையாட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
எங்கள் நாட்டு டென்னிஸ் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் வரை இனி நான் ரஷியா மற்றும் பெலாரஸ் டென்னிஸ் வீரர்களுக்கு எதிராக டென்னிஸ் தொடரில் விளையாட மாட்டேன்.
அதே நேரத்தில் நான் ரஷிய விளையாட்டு வீரர்களைக் குறை கூற விரும்பவில்லை. போருக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை தைரியமாக வெளிப்படுத்திய அனைத்து வீரர்களுக்கும், குறிப்பாக ரஷ்யர்கள் மற்றும் பெலாரசியர்கள் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களின் ஆதரவு மிகவும் அவசியம்.
தற்போதைய சூழ்நிலை குறித்து உலக டென்னிஸ் கூட்டமைப்புகள் தெளிவான நிலைப்பாட்டை தெரிவிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.