Image Courtesy : AFP 
டென்னிஸ்

உக்ரைனில் நடப்பதை பார்த்தால் வேதனையாக உள்ளது- எலினா ஸ்விடோலினா

தாய்நாட்டில் நடப்பதை தாங்க முடியவில்லை என எலினா ஸ்விடோலினா வேதனை தெரிவித்துள்ளார்.

கீவ்,

உலக பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் முன்னணி வீராங்கனையாக விளங்குபவர் எலினா ஸ்விடோலினா. இவர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர். கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இவர் தற்போது மாட்ரிட் மற்றும் ரோமில் நடக்கும் டென்னிஸ் இருந்து விலகியுள்ளார்.

இது குறித்து எலினா ஸ்விடோலினா கூறுகையில், "நீண்ட காலமாக எனது முதுகில் ஏற்பட்டுள்ள காயத்துடன் போராடி வருகிறேன். இந்த வலியால் போட்டிகளுக்கு என்னை தயார் செய்து கொள்ள முடியவில்லை.

இதற்கிடையில், என் தாய்நாடான உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதை என்னால் தாங்கமுடியவில்லை. என் இதயம் வேதனையில் உள்ளது. உக்ரேனிய மக்களின் தைரியம் தான் டென்னிஸ் களத்தில் நான் போராட எனக்கு உந்துதலை தருகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் எலினா ஸ்விடோலினா இவ்வாறு பேசியுள்ளார்.