நியூயார்க்,
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 5-வது முறையாக கார்லஸ் அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ், 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் டாமி பாலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்த வெற்றியின் மூலம் கார்லஸ் அல்காரஸ் 5-வது முறையாக அமெரிக்க ஓபன் தொடரின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் அமெரிக்க வீரர் ஷெல்டனை நாளை எதிர்கொள்கிறார்.