நியூயார்க்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 30-ந் தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது. இதில் இடம் பெறும் கலப்பு இரட்டையர் பிரிவு இந்த முறை முன்கூட்டியே புதிய புள்ளி அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் சுற்றில் ரோட்லைப் (நியூசிலாந்து) - லாய்ட் கிளாஸ்பூல் (இங்கிலாந்து) இணையை (5-3, 4-1) தோற்கடித்த செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)-கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஜோடி அடுத்து நடந்த கால்இறுதியில் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) -பிளவியா கோபோலி (இத்தாலி) ஜோடியை சந்தித்தது. 55 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் செரீனா -அல்காரஸ் ஜோடி 4-5 (4-7), 1-4 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறியது.