டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் வெற்றி

4-வது சுற்றில் டாமி பாலை சந்திக்கிறார்.

வாஷிங்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. கடினதரை போட்டியான இதில் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-3, 6-4, 6-1 என்ற நேர் செட் டில் சீனாவின் யிங் யூவை எளிதில் வீழ்த்தினார்.

அல்காரஸ் 4-வது சுற்றில் உள்ளூர் நாயகன் டாமி பாலை சந்திக்கிறார். இருவரும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியதில் அல்காரஸ் 6-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கி றார்.மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் பிரான்சின் ஆர்துர் ரின்டர்க்னெச்சுக்கு 'செக்' வைத்தார்.

SCROLL FOR NEXT