image courtesy; AFP  
டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்..!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நியூயார்க,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று போட்டி ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி- அமெரிக்காவின் ஜூலியன் கேஷ், ஹென்றி பேட்டன் ஜோடியுடன் மோதியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் போபண்ணா ஜோடி 6-4, 6-7 (5-7), 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

SCROLL FOR NEXT