image courtesy:Twitter/@usopen 
டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஜோகோவிச் முதல் சுற்றில் லியர்னர் டீன் உடன் மோதினார்.

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் லியர்னர் டீன் உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட ஜோகோவிச் 6-1, 7-6 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இவர் 2-வது சுற்றில் சக்கரி ஸ்வஜ்தா உடன் மோத உள்ளார்.

SCROLL FOR NEXT