image courtesy:twitter/@usopen 
டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மகளிர் இரட்டையர் பிரிவில் எரின் ரூட்லிப் ஜோடி சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

இதன் மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் எரின் ரூட்லிப் - கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை, டெய்லர் டவுன்சென்ட் - கட்டெரினா சினியாகோவா ஜோடியுடன் மோதியது.

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எரின் ரூட்லிப் - கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை 6-4 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

SCROLL FOR NEXT