வாஷிங்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. கடினதரை போட்டியான இதில்
பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா சரிவில் இருந்து மீண்டு வந்து 1-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கனடாவின் லேலா பெர்னாண்டசை சாய்த்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
'நம்பர் ஒன்' வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-4, 6-3 என்ற நேர் செட்டில் உஸ்பெகிஸ்தானின் ரஹிமோவாவை துவம்சம் செய்தார்.