image courtesy:twitter/@usopen 
டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் ஜானிக் சினெர் அரையிறுதிக்கு தகுதி

சினெர் காலிறுதியில் முசெட்டி உடன் மோதினார்.

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சினெர், சக நாட்டவரான லோரென்சோ முசெட்டி உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சினெர் 6-1, 6-4 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் அரையிறுதில் பெலிக்ஸ் ஆகர் அலியாசீம் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.