image courtesy: AFP 
டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரூப்லெவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ரூப்லெவ் தனது அடுத்த ஆட்டத்தில் ஜிரி லெஹெக்கா உடன் மோத உள்ளார்.

நியூயார்க்,

பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), ஆர்துர் ரின்டர்னிச் (பிரான்ஸ்) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் முதல் 2 செட்டுகளை இழந்த ரூப்லெவ், பின்னர் சரிவில் இருந்து வலுவாக மீண்டு வந்து அடுத்த 3 செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். 4 மணி நேரம் 6 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் ரூப்லெவ் 4-6, 5-7, 6-1, 6-2 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இவர் தனது 3-வது சுற்று ஆட்டத்தில் ஜிரி லெஹெக்கா உடன் மோத உள்ளார்.

SCROLL FOR NEXT