வாஷிங்டன்,
கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா 6-1, 6-4 என்ற நேர்செட்டில் 2 முறை சாம்பியனான நவோமி ஒசாகாவை (ஜப்பான்) வெறும் 66 நிமிடங்களில் பந்தாடி, அமெரிக்க ஓபனில் முதல்முறையாக காலிறுதியை அடைந்தார்.
இன்னும் ஒரு வெற்றி பெற்றால் ரைபகினா தரவரிசையில் முதல்முறையாக 'நம் பர் ஒன்' இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.