லண்டன்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், வாவ்ரிங்காவை வீழ்த்தி மேத்யூ அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், நேற்று நடந்த முதல் சுற்று போட்டி ஒன்றில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஸ்டான் வாவ்ரிங்கா (வயது 41) மற்றும் மேத்யூ பெர்ரட்டினி ஆகியோர் விளையாடினர்.
இந்த போட்டியின் தொடக்க செட்டை 6-7(7) என வாவ்ரிங்கா கைப்பற்றினார். ஆனால், அடுத்தடுத்த செட்டுகளில் அதிரடியாக விளையாடி மேத்யூ வெற்றி பெற்றார். 4 மணிநேரம் 19 நிமிடங்கள் நீடித்த போட்டியில் 6-7(7), 7-6(16), 7-6(7), 7-6(5) என்ற செட் கணக்கில் வாவ்ரிங்காவை வீழ்த்தி மேத்யூ அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதனால், விம்பிள்டன் தொடரில் இருந்து வாவ்ரிங்கா வெளியேறினார். இந்த சீசனுடன், டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் வாவ்ரிங்கா இருக்கிறார். அந்த வகையில் மேத்யூ உடனான இந்த போட்டி இறுதிப்போட்டியாக அமைந்து விட்டது.