டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி; ஜோகோவிச், சின்னர் வெற்றி

ஜோகோவிச் கடுமையாக போராடி 6-4, 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

லண்டன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், சின்னர் வெற்றி பெற்றனர்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஒற்றையர் ஆட்டங்கள் நடந்தன. இதில், ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் மற்றும் நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி), செர்பியாவின் கேக்மனோவிச்சை 4-6, 6-3, 6-7 (6-8), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

நோவக் ஜோகோவிச்

இந்த ஆட்டம் மூன்றரை மணி நேரம் நீடித்தது. இந்த வெற்றியை சின்னர் போராடி பெற்றார். இதேபோன்று மற்றொரு போட்டியில், நோவக் ஜோகோவிச் மற்றும் சீனாவின் வூ யிபிங் விளையாடினர். அதில், 6-4, 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி ஜோகோவிச் வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை ஜோகோவிச் எதிர் கொள்ள இருக்கிறார்.