டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி...!!

முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.

தினத்தந்தி

லண்டன்,

கிராண்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த முதல் சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் உக்ரைன் வீராங்கனையான சுவிட்டோலினாவை எதிர் கொண்டார் .விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து சுவிட்டோலினா 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதனால் முன்னாள் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே வெளியேறி உள்ளார்.

வீனஸ் வில்லியம்ஸ் 5 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் நடந்த மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனையான கோகோ கவூப்பூம் தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்து வெளியேறினார்.அவருடன் மோதிய சக நாட்டைச் சேர்ந்த சோபியா கெனின் 6-4, 4-6, 6-2 என்ற கணக்கில் கோகோ  கவூப்பை வீழ்த்தினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்ற ஆட்டங்களில் முதல்நிலை வீராங்கனையான இகாஸ்வியா டெக் (போலந்து), 4-வது வரிசையில் உள்ள பெகுலா (அமெரிக்கா), கரோலினோ கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை