டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜெசிகா அரைஇறுதிக்கு முன்னேற்றம்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது.

இண்டியன்வெல்ஸ்,

உலகின் 'டாப்-8' முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது.

ஜெசிகா பெகுலா

இதில் குரூப்1 பிரிவு ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, விம்பிள்டன் சாம்பியனான லிண்டா நோஸ்கோவாவுடன் (செக்குடியரசு) மல்லுக்கட்டினார். திரில்லிங்கான ஆட்டத்தில் 16 ஏஸ் சர்வீஸ் போட்டு மிரட்டிய ஜெசிகா பெகுலா 7-6 (7-2), 4-6, 7-5 என்ற செட் கணக்கில் நோஸ்கோவாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றார். முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கோகோ காப் (அமெரிக்கா) 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மார்த்தா கோஸ்ட்யுக்கை (உக்ரைன்) தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றார்.

லீக் சுற்று முடிவில் குரூப் 1 பிரிவில் லிண்டா நோஸ்கோவா, ஜெசிகா பெகுலா. கோகோ காப் தலா 2 வெற்றி. ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தனர். செட் விகிதாச்சாரம் அடிப்படையில் நோஸ்கோவா, ஜெசிகா பெகுலா முறையே முதல் இரு இடங்களை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தனர். கோகோ காப் 3-வது இடமும், 3 ஆட்டங்களிலும் தோற்ற மார்த்தா கோஸ்ட்யுக் கடைசி இடமும் பெற்று வெளியேறினர்.

SCROLL FOR NEXT