டென்னிஸ்

உலக டென்னிஸ் தரவரிசை: ரைபகினா முதலிடம்

ரைபகினா அரைஇறுதியை எட்டிய போதே 'நம்பர் ஒன்' இடத்தை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மியாமி,

உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இத்தாலி வீரர் ஜானிக் சினெர் (11,500 புள்ளி) முதலிடத்திலும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (9,690) 2-வது இடத்திலும், ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் (5,560) 3-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில், அமெரிக்க ஓபனை வென்ற 27 வயது கஜகஸ்தான் வீராங் கனை எலினா ரைபகினா (9,901 புள்ளி) முதல்முறையாக 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார். ரைபகினா அரைஇறுதியை எட்டிய போதே 'நம்பர் ஒன்' இடத்தை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 99 வாரங்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா (7,875) 2-வது இடத்துக்கு சரிந்தார். அமெரிக் காவின் ஜெசிகா பெகுலா (7,265), கோகோ காப் (7,244), ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா (5,743), செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவா (5.328) முறையே 3 முதல் 6 இடங்களில் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.

SCROLL FOR NEXT