கோப்புப்படம்  
டென்னிஸ்

வுஹான் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் கோகோ காப்

வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

பீஜிங்,

வுஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா) - ஜெர்மனியின் லாரா செக்மண்ட் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் லாரா செக்மண்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 

SCROLL FOR NEXT