வூஹான்,
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற போட்டிகளில், நடப்பு சாம்பியன்களான கத்தரினா சினியாகோவா - ஸ்டார்ம் ஹண்டர் இணை வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் இத்தாலியின் சாரா எரானி - ஜாஸ்மின் பாவ்லினி இணை வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இரட்டையர் பிரிவில் சீனாவின் குவோ ஹன்யு மற்றும் பிரான்ஸின் கிறிஸ்டினா ம்லாடெனோவிச் இணை, கத்தரினா சினியாகோவா - ஸ்டார்ம் ஹண்டர் இணையை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், சினியாகோவா - ஹண்டர் இணை 6-4, 2-6, 10-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு இரட்டையர் போட்டியில் இத்தாலியின் சாரா எரானி - ஜாஸ்மின் பாவ்லினி இணை, ஜாங் ஷுவாய் - அன்னா டானிலினா இணையை எதிர்கொண்டது.
இதில் சிறப்பாக விளையாடிய எரானி - பாவ்லினி இணை 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.