டென்னிஸ்

வூஹான் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறிய ஜாஸ்மின், மரியா

2-வது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, செக் குடியரசின் நிகோலா பர்டுன்கோவாவை எதிர்கொண்டார்.

வூஹான்,

சீனாவில் நடைபெற்று வரும் வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, கிரீசின் மரியா சக்காரி ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

பவுலினி

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் முன்னணி வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, செக் குடியரசின் நிகோலா பர்டுன்கோவாவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பவுலினி 7-6 (7-5) என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், 2-வது செட்டையும் 6-3 என்ற கணக்கில் வென்றார்.

இதன் மூலம் 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற பவுலினி, 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சக்காரி

மற்றொரு 2-வது சுற்றுப் போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, உக்ரைனின் மர்டா கோஸ்ட்யுக்குடன் மோதினார்.

முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்த சக்காரி, அடுத்த இரு செட்களிலும் அதிரடியாக விளையாடினார். 2-வது செட்டை 6-2 என்றும், 3-வது செட்டை 6-2 என்றும் கைப்பற்றினார்.

இறுதியில் 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற மரியா சக்காரி, வூஹான் ஓபன் தொடரின் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT