டென்னிஸ்

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ்: அலெக்ஸ் டி மினார் அரையிறுதிக்கு முன்னேற்றம்

அலெக்ஸ் டி மினார், நெதர்லாந்தின் பொடிக் வான் டெ உடன் மோதினார்.

ஆம்ஸ்டர்டாம்,

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், நெதர்லாந்தின் பொடிக் வான் டெ உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அலெக்ஸ் டி மினார் 3-6, 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.