புது டெல்லி,
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) உத்தரவின்படி, ஏர்டெல் நிறுவனம் மொபைல் டேட்டா வசதி இல்லாமல், வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். சலுகைகள் மட்டும் கொண்ட 3 புதிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் உள்ளூர், எஸ்.டி.டி. மற்றும் ரோமிங் அழைப்புகள் அனைத்தும் வரம்பற்றதாகும். மேலும், 300 இலவச எஸ்.எம்.எஸ்.களும் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் மொபைல் டேட்டா வசதி கிடையாது.
இந்தத் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டுள்ளது. இதில் வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி. மற்றும் ரோமிங் அழைப்புகளுடன் 300 இலவச எஸ்.எம்.எஸ்.களும் வழங்கப்படுகின்றன. இதில் டேட்டா சலுகை இல்லை.
இந்தத் திட்டம் ஒரு காலண்டர் மாதத்திற்கான வேலிடிட்டியைக் கொண்டுள்ளது. இதில் வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி. மற்றும் ரோமிங் அழைப்புகள், 300 இலவச எஸ்.எம்.எஸ்.கள் மற்றும் இலவச ஹலோ டியூன்ஸ் வசதி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திலும் மொபைல் டேட்டா கிடையாது.
இந்த 3 புதிய ரீசார்ஜ் திட்டங்களையும் ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் பெறலாம். மொபைல் டேட்டா தேவையின்றி அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். வசதிகளை மட்டும் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.