அதிவேக செயல்திறன், சிறந்த கேமரா, உயர்தர டிஸ்பிளே, நீண்டகால மென்பொருள் அப்டேட் போன்ற உயர்தர வசதிகளை கொண்ட பிரீமியம் ஸ்மார்ட் போன்களின் விலை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் 30 சதவீதம் வரை அதிகரிக்கும் என ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது. டிராம் (தற்காலிக ஸ்டோரேஜ்) மற்றும் நாண்ட் விலை அதிகரிப்பு, ஏ.ஐ. தரவு மைய தேவை அதிகரிப்பு போன்றவை கடந்த 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்ததை விட தற்போது 40 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது.
இதனால் மேற்படி ஸ்மார்ட் போன்களின் விலையை மாற்றியமைக்கும் நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டு இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.சந்தையின் முன்னணி விற்பனையாளரான சாம்சங் ஏற்கனவே ஸ்மார்ட் போன்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. மேலும் தனது பிரீமியம் ஸ்மார்ட்போனான கேலக்சி எஸ்26-ன் விலையை தீபாவளிக்கு முன்னரே 17 சதவீதம் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.