புதுச்சேரி

தனியார் கம்பெனியில் மின் மோட்டார்கள் திருட்டு

வில்லியனூர் அருகே தனியார் கம்பெனியில் மின் மோட்டார்களை திருடியவர்களை போலீசார் வலைவைசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

வில்லியனூர்

வில்லியனூர் புதுநகர் கணுவாப்பேட் பகுதியை சேர்ந்தவர் டேவிட் (வயது 64). இவர் கூடப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். தற்போது அந்த கம்பெனி மூடப்பட்டுள்ளது. இவர் வாரத்திற்கு 2 முறை கம்பெனிக்கு சென்று பார்வையிட்டு வருவது வழக்கம்.

சம்பவத்தன்று அவர் கம்பெனிக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த 6 மின்மோட்டார்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. மர்மநபர்கள் யாரோ மின் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து