புதுச்சேரி

முதல் மனைவி, குழந்தைகளை வீட்டை விட்டு வெளியேற்றிய மீனவர்

2-வது திருமணம் செய்து கொண்டு முதல் மனைவி, குழந்தைகளை தவிக்க விட்டு வீட்டை விட்டு வெளியேறிய மீனவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியாங்குப்பம்

வீராம்பட்டினம் சிவாஜி நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கலைஞர் (வயது 40), மீனவர். இவரது மனைவி ஜமுனா (32). இவர்களுக்கு மதிலேஷ் (6) என்ற மகனும், ரசிகா (4) என்ற மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் கலைஞர், வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு இடையூறாக முதல் மனைவி ஜமுனா மற்றும் குழந்தைகள் இருப்பதாக கூறி, அவர்களை கலைஞர் தரக்குறைவாக திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஜமுனாவின் 25 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அவரையும், குழந்தைகளையும் வீட்டைவிட்டு வெளியேற்றினாராம்.

இது குறித்து அரியாங்குப்பம் போலீசில் ஜமுனா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைஞரை தேடி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்